மருத்துவர் அய்யா அவர்களுக்கு....
படிப்பு வசதி பெறாத ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து... உங்களின் போராட்டங்களை பார்த்து... அனுபவித்து... பங்கு பெற்று... பலன் அடைந்து... சாதித்து... இன்று விளம்பர துறையில் நல்ல நிலையில்... நல்ல பணியில்... இருக்கும் ஒரு தனி மனிதனின் வேண்டுகோள்கள் இங்கே......
வேண்டுகோள்களை அடுக்கும் முன்... ஒரு சிறிய முண்ணோட்டம்...
நான் என்னுடைய பள்ளி பருவத்துக்கு போகிறேன். ஐந்தாம் வகுப்பு இருக்கும். எங்கள் கிராமத்தில் இருந்து ஆறு கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று பாடம் படித்த ஒரு சிலரில் நானும் ஒருவன்.
ஆரம்பத்தில் அப்பாவின் JAVA YEZDI யிலும், பின்பு "DART"லும், பிறகு என்னுடைய மிதிவண்டியிலும் பயணித்து தூரத்தை கடப்பது வழக்கம். அன்று ஒரு நாள், அப்படி என்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது உங்கள் புண்ணியத்தில். சாலைகள் எல்லாம் பிளந்து..... மரங்கள் வெட்டப்பட்டு..... ஒரு சில வாகணங்கள் தீக்கிரையாகி.... போர் களமாக காட்சி தந்தது எங்கள் ஊர் சாலை.
அறியாத வயதில் புரியாத சிறுவனாய் வீடு திரும்பிய நாட்கள் அவை. பள்ளிக்கு விடுப்பு.
தொடர்ந்து எழுதுவேன்...
Thursday, April 5, 2007
Wednesday, April 4, 2007
யார் மேல் கோபம்?
யார் மேல் கோபம்? தமிழ் மொழி மேலா? தமிழன் மேலா?
காவிரிக்கும் வியாபாரிக்கும் என்ன சம்பந்தம்?
திரையரங்கம் உடைக்கபட்டதால் என்ன பயன்? யாருக்கு நட்டம்?
நினைத்து பார்... திரையரங்கம் உன்னுடையது...
உன் தேசத்தில் உள்ளது... கன்னட மொழி பேசும் உன் சகோதரனுடையது... நினைத்து பார்க்க ஒரு நிமிடம் போதும்... சிந்தி...
மழை பெய்து, காவிரியில் நீர் இருந்தால் கொடு... தமிழனும் மனிதன்... உன் சகோதரன் தான்... என நினைத்தால் கொடு... மேட்டூர் முதல் வேதாரன்யம் வரை தமிழன் படும் பாட்டை அறி....
அறிந்து.... தெளிந்தால்... யாருடைய வாழ்வாதாரத்தையும் கெடுக்காதே.... தமிழன் என்றில்லை... உன் சகோதரன் தமிழ் படம் திரையிட்டாலும் திரையரங்கை உடைக்காதே...
செய்தி: தமிழ் படம் திரையிட்டதால் பெங்கலூரு சம்பிகே திரையரங்கம் உடைக்கபட்டது!

யாழினுது.....
இது என்னுடைய முதல் பயணம். முதல் தொடக்கம். முதல் முயற்சி. முதல் விடியல். முதல் எண்ண்ம். முதல் எழுத்து. முதல் பரிமானம். முதல் கோனல். முதல் நேரம். முதல் வேகம்.
முடியுமா என்னால்? முயற்சிக்கிறேன்.
முடியுமா என்னால்? முயற்சிக்கிறேன்.
Subscribe to:
Comments (Atom)