Wednesday, April 4, 2007

யார் மேல் கோபம்?

யார் மேல் கோபம்? தமிழ் மொழி மேலா? தமிழன் மேலா?

காவிரிக்கும் வியாபாரிக்கும் என்ன சம்பந்தம்?
திரையரங்கம் உடைக்கபட்டதால் என்ன பயன்? யாருக்கு நட்டம்?

நினைத்து பார்... திரையரங்கம் உன்னுடையது...
உன் தேசத்தில் உள்ளது... கன்னட மொழி பேசும் உன் சகோதரனுடையது... நினைத்து பார்க்க ஒரு நிமிடம் போதும்... சிந்தி...

மழை பெய்து, காவிரியில் நீர் இருந்தால் கொடு... தமிழனும் மனிதன்... உன் சகோதரன் தான்... என நினைத்தால் கொடு... மேட்டூர் முதல் வேதாரன்யம் வரை தமிழன் படும் பாட்டை அறி....

அறிந்து.... தெளிந்தால்... யாருடைய வாழ்வாதாரத்தையும் கெடுக்காதே.... தமிழன் என்றில்லை... உன் சகோதரன் தமிழ் படம் திரையிட்டாலும் திரையரங்கை உடைக்காதே...

செய்தி:
தமிழ் படம் திரையிட்டதால் பெங்கலூரு சம்பிகே திரையரங்கம் உடைக்கபட்டது!

No comments: